ETV Bharat / state

காய்கறி சந்தைக்கு வரும் மக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை - விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்த சாரதி ஆய்வு

விருதுநகர்: தற்காலிக காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு வருவதை விருதுநகர் நகராட்சி ஆணையர் பார்த்த சாரதி ஆய்வு செய்தார்.

விருதுநகர்: தற்காலிக காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை

author img

By

Published : May 6, 2020, 12:49 PM IST

ஊரடங்கை தொடர்ந்து விருதுநகரில் பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தடுக்கும் விதமாக புதிய பேருந்து நிலையம், உழவர் சந்தை, மின்வாரிய அலுவலகம், மற்றும் நகராட்சி மைதானம் ஆகிய இடங்களில் காய்கறி விற்பனை செய்ய நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

இந்தத் தற்காலிக காய்கறி சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனையை விருதுநகர் நகராட்சி ஆனணயர் பார்த்தசாரதி மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து காய்கறி விற்பனை செய்பவர்கள் மற்றும் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

அதிக வெப்பநிலை இருக்கும் நபர்களை கண்டறிந்து அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு கரோனோ பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் கூடும் இடங்கள் மற்றும் நகரத்தின் வீதிகளில் நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க:

காய்கறிச் சந்தை இடமாற்றத்தை எதிர்த்து வியாபாரிகள் கடையடைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.