விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தாலுகாவில் 36 பஞ்சாயத்துகள் உள்ளன. தற்போது 32 பஞ்சாயத்துக்களில் ஊராட்சி மன்ற செயலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரும் எந்த ஒரு தகவலையும் ஊராட்சி மன்றத் தலைவருக்குத் தெரிவிக்காமல் தன்னிச்சையாகச் செயல்படுவதாகக் கூறி, 10க்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து புகார் அளிக்க வந்தனர்.
அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் கோரிக்கைகளைக் கேட்காமல் வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். இதையடுத்து திடீரென ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: 1913க்கு ஒரு ரீங் விட்டா போதும்' - கரோனா நோயாளிகளுக்காக சென்னை மாநகாரட்சியின் அறிவிப்பு