ETV Bharat / state

மத்திய பட்ஜெட்டை எதிர்த்து போராட்டம்- முத்தரசன் - Budget 2020

விருதுநகர்: மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடது சாரிகள் சார்பாக வருகின்ற 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை அனைத்து மாநிலங்களிலும் பல கட்ட போராட்டம் நடைபெற உள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

nationwide-struggle-on-behalf-of-left-front-condemns-union-budget
nationwide-struggle-on-behalf-of-left-front-condemns-union-budget
author img

By

Published : Feb 8, 2020, 8:59 PM IST

விருதுநகரில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”குடியுரிமை சட்டம் விவகாரத்தில் பாஜக அரசு ஜனநாயக பாதையை விட்டு விலகி செல்கிறது. ஜனநாயகத்தை நம்பாமல் சர்வாதிகாரத்தின் மேல் நம்பிக்கை கொண்ட கட்சி பாஜக. பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, எல்ஐசியை அடி மாட்டு விலைக்கு விற்கும் முயற்சி நடை பெற்று வருகிறது என குற்றஞ்சாட்டினார்.

மேலும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடதுசாரிகள் சார்பாக வருகின்ற 12ஆம் தேதி முதல் 18ஆம் தேதிவரை அனைத்து மாநிலங்களிலும் பல கட்ட போராட்டம் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து பேசிய அவர், டிஎன்பிஎஸ்சி அரசுத் தேர்வு முறை கேட்டில் பிடிபட்ட அனைவரும் சுண்டெலிகள். பல பெருச்சாளிகள் இதுவரை பிடிபடவில்லை. அப்படி பிடிபடாதவர்கள் அமைச்சர்களாகக்கூட இருக்கலாம். இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டை கண்டித்து இடது சாரிகள் சார்பாக நாடுதழுவிய போராட்டம்

மேலும், தாக்கல் செய்யப்பட உள்ள தமிழ்நாடு பட்ஜெட்டில் விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும். நீட் விவரத்தில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுவதை விட்டுவிட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க:குரூப் 2A தேர்வு முறைகேடு: இருவரிடம் சிபிசிஐடி விசாரணை

Intro:விருதுநகர்
08-02-2020

மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடது சாரிகள் சார்பாக வருகின்ற12ம் தேதி முதல் 18 ம் தேதி வரை வரை அனைத்து மாநிலங்களிலும் பல கட்ட போராட்டம் நடைபெற உள்ளது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி

Tn_vnr_03_mutharasan_byte_vis_script_7204885Body:இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் குடியுரிமை சட்டம் விவகாரத்தில்
பாஜக அரசு ஜனநாயக பாதை விட்டு விலகி செல்கிறது. ஜனநாயகத்தை நம்பாமல் சர்வாதிகாரத்தின் மேல் நம்பிக்கை கொண்ட கட்சி பிஜேபி அரசு. பொதுத்துறை நிறுவனமான ரயில்வே எல்ஐசியை அடி மாட்டு விலைக்கு விற்கும் முயற்சி நடை பெற்று வருகிறது. மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து இடது சாரிகள் சார்பாக வருகின்ற12ம் தேதி முதல் 18 ம் தேதி வரை வரை அனைத்து மாநிலங்களிலும் பல கட்ட போராட்டம் நடைபெற உள்ளது. TNPSC அரசுத் தேர்வு முறை கேட்டில் பிடிபட்ட அனைவரும் சுண்டெலிகள் பல பெருச்சாளிகள் இதுவரை பிடிபடவில்லை பிடிபடாதாவர்கள் அமைச்சர்களாக கூட இருக்கலாம் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். தாக்கல் செய்யப்பட உள்ள தமிழக பட்ஜெட்டில் விவசாயிகள் காப்பாற்ற பட வேண்டும் பயிர் இன்சூரன்ஸ் முறையாராக வழங்கப்பட வேண்டும். நீட் விவரத்தில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதை விட்டு விட்டு சட்ட மற்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலை பற்றி நீதிமன்றம் பலமுறை அறிவுறுத்தியும் தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என கூறியும் தமிழக அரசு ஏன் மவுனமாக என உள்ளது என கேள்வி எழுப்பினார். மேலும் நடிகர் விஜய் படப்பிடிப்பில் பிஜேபியினர் நடத்திய ஆர்ப்பாட்டம் கண்டத்துக்கு கூறியது வருமான வரித்துறையை மத்திய அரசு அனைவரையும் அடிபணிய வைக்க பயன்படுத்துகிறது. பிஜேபி தமிழகத்தில் செல்வாக்கில் உள்ள பலரை பலவிதமாக பணிய வைக்க முயல்கிறது என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.