‘உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர அதிமுகவை ஆதரியுங்கள்’ - ராஜேந்திர பாலாஜி - Minister Rajendra Balaji launches election campaign in Vembakottai
விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையின் போது உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர்ந்திட அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் வருகிற 27ஆம் தேதி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு தோ்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், விருதுநகஎர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
இந்த பரப்புரை முதலாவதாக வெற்றிலையூரணியில் ஆரம்பித்து தாயில்பட்டி, விஜயகரிசல்குளம், மீனாட்சிபுரம், வெம்பக்கோட்டை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது, பொதுமக்களிடம் அவர் பேசுகையில், உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர்ந்திட தொடர்ந்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும் என்றும், உங்கள் குறைகள் தீர்ந்திட இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் எனவும் கோரிக்கை வைத்தார்.
மேலும், விருதுநகர் மாவட்டத்தின் முதுகெலும்பாக உள்ள பட்டாசுத் தொழிலுக்கு பிரச்னை வந்தபோது அதற்கு உடனடி தீர்வு கண்டு, பட்டாசு தொழிலை பாதுகாத்தது அதிமுக அரசுதான் எனவும் அமைச்சர் கூறினார்.
இதையும் படிங்க: 'குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து வதந்தியைப் பரப்புவது தீவிரவாத செயல்' - ராஜேந்திர பாலாஜி
24-12-19
பட்டாசு தொழிலை பாதுகாத்தது அதிமுக அரசு தான் - பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்
Tn_vnr_03_rajenthira_balaji_speech_vis_script_7204885Body:பட்டாசு தொழிலை பாதுகாத்தது அதிமுக அரசு தான் சாத்தூர் அருகே தோ்தல் பிரச்சாரத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெருமிதம்
விருதுநகா் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டையில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவி மற்றும் மாவட்ட கவுன்சிலா் பதவிகளுக்கு வருகிற 27ம் தேதி தோ்தல் நடைபெற உள்ளது. ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் மற்றும் மாவட்ட கவுன்சிலா் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு ஆதரவாக தமிழக பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது பிரச்சாரத்தை வெம்பக்கோட்டை பகுதியில் தொடங்கினார். முதலாவதாக வெற்றிலையூரணியில் ஆரம்பித்து தாயில்பட்டி விஜயகரிசல்குளம் மீனாட்சிபுரம் வெம்பக்கோட்டை உள்ளிட்ட 20க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று அதிமுக வேட்பாளா்களுக்கு ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொது மக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உள்ளாட்சியில் நல்லாட்சி தொடர்ந்திட தொடர்ந்து அதிமுகவை ஆதரிக்க வேண்டும் உங்கள் குறைகள் தீர இரட்டை இலைக்கே வாக்களியுங்கள் என்றார். மேலும் இந்தப் பகுதிகளில் பிரதான தொழிலான பட்டாசுத் தொழிலுக்கு பிரச்சனை வந்தபோது அதற்கு உடனடி தீர்வு கண்டு மீண்டும் தொழிலை கொண்டு வந்து பட்டாசு தொழிலை பாதுகாத்தது அதிமுக அரசு தான் எனவே சட்டசபை தேர்தலில் ஆதரித்து வெற்தி பெறச் செய்தது போல் உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கூறினார். Conclusion: