விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள சொக்கநாதன்புத்தூர் பகுதியில் மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்து வந்ததாக தளவாய்புரம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் காவல் துறையினர் சொக்கநாதன்புத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அதேபகுதியைச் சேர்ந்த ராமர் என்பவர் மது பாட்டில் விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த 250 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவரை கைது செய்தனர். மேலும் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.