ETV Bharat / state

மின்வாரிய அலுவலர் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு; சக ஊழியர்கள் அச்சம்

author img

By

Published : Jun 9, 2020, 4:04 PM IST

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே துணை மின் நிலையம் அலுவலகத்தில் பணியிலிருந்த லயன் ஆய்வாளர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Line Inspector dies from suffocation while working in office

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நரிக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் எஸ்.கொடிக்குளம் பகுதியிலுள்ள துணை மின் நிலையத்தின் லைன் ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் துணை மின் நிலைய அலுவலகத்தில் யாரும் இல்லாத வேளையில், சக்திவேல் சந்தேகமான முறையில் இறந்து கிடந்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற கூமாப்பட்டி காவல் துறையினர், சக்திவேலின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறாய்வு முடிவில் சக்திவேல் மூச்சுத் திணறலால் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். துணை மின் நிலைய ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவத்தால் சக ஊழியர்கள் ஒருவித அச்ச உணர்வுடன் காணப்படுகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.