ETV Bharat / state

மத உணர்வை தூண்டிய ஜீயர் - காவல்துறை சம்மன்

author img

By

Published : Aug 19, 2019, 7:17 PM IST

விருதுநகர்: அத்திவரதர் குறித்து மத உணர்வை தூண்டும்படி பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஜீயருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

jiyar

அத்திவரதர் குறித்து கடந்த மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் மடத்தில் ஜீயர் சடகோப ராமானுஜர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், அத்திவரதரை மீண்டும் குளத்தில் வைக்கக்கூடாது எனவும், கடந்த காலங்களில் இஸ்லாமியருக்கு பயந்து அத்திவரதரை மறைத்து வைத்ததாகவும், தற்போது அந்த சூழ்நிலை இல்லை எனவும் ஜீயர் தெரிவித்தார்.

ஜீயர் செய்தியாளர்களை சந்தித்த போது

இந்நிலையில் மத உணர்வை தூண்டும்படி ஜீயர் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது அலி முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்தார். அதனடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் வரும் 22ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி ஜீயர் சடகோப ராமானுஜருக்கு, காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.

Intro:விருதுநகர்
19-08-19

மத உணர்வை தூண்டும் படியாக பேசியதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஜீயருக்கு காவல்துறை சம்மன்

Tn_vnr_03_jiyar_samman_vis_script_7204886Body:அத்திவரதர் குறித்து கடந்த மாதம் 22.07.19 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாளமாமுனிகள் மடத்தில் வைத்து ஜீயர் சடகோப ராமானுஜ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர் அத்தி வரதரை மீண்டும் குளத்தில் வைக்கக் கூடாது எனவும், கடந்த காலங்களில் இஸ்லாமியருக்கு பயந்து அத்தி வரதரை மறைத்து வைத்ததாகவும் தற்போது அந்த சூழ்நிலை இல்லை எனவும் ஜீயர் செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்நிலையில் மத உணர்வை தூண்டும்படி ஜீயர் பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட செயலாளர் சையது அலி என்பவர் முதல்வரின் தனிப் பிரிவிற்கு ஆன்லைன் மூலம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல்நிலையத்தில் வரும் 22ஆம் தேதிக்குள் நேரில் ஆஜராகும்படி ஜீயர் சடகோப ராமானுஜருக்கு காவல்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.