ETV Bharat / state

6 ஆண்டுகளுக்குப் பிறகு ஆவியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு! - virudhunager news

விருதுநகர்: ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆவியூரில் 600-க்கும் மேற்பட்ட காளைகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.

ஆவியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு
ஆவியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு
author img

By

Published : Mar 9, 2020, 1:18 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ஆவியூரில் ஸ்ரீ அழகிய பெருமாள் சுவாமி, ஸ்ரீ பெரிய கருப்பண்ணசாமி கோயிலில் மாசி மகாசிவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீ நள பெருமாள் வகையறா சார்பில் ஊர் மக்கள் ஒற்றுமைக்காகவும், விவசாயம் செழிக்கவும், மழை வேண்டியும் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

ஜல்லிக்கட்டுக்கான தடை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆறு ஆண்டுகளாக இப்போட்டி நடைபெறாமலிருந்தது. ஊர் மக்களின் முயற்சியால் இந்தாண்டு இன்று சிறப்பாக நடைபெற்றது. ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த காளைகளுக்கும் அடக்கவந்த மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது.

ஆவியூரில் களைகட்டிய ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியதும் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதைத் தொடர்ந்து, வாடிவாசலிலிருந்து போட்டிக்குத் தயாரான காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்துவிடப்பட்டன.

இந்த போட்டிக்காக, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகள் வந்திருந்தன. இதில், 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கினர்.

போட்டி நடைபெற்ற இடத்தில், 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நடமாடும் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

போட்டியில் பங்கேற்க ஆயிரத்துக்கும் அதிகமான காளைகள் வந்திருந்தாலும், 600 காளைகளுக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்பட்டதால் மற்ற காளைகளின் உரிமையாளர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

இதையும் படிங்க: மதுரை மீனாட்சி கோயில் குளத்தை புனரமைக்கும் பணிகள் தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.