விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட அலுவலர்களுடன் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறுகையில், "கரோனா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பரவலை தடுக்க உள்ளாட்சி துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கரோனா தொற்று குறித்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்" என்றார்.
இதைத் தொடர்ந்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது, "விருதுநகர் மாவட்டத்தில் கரோனா இறப்பு விழுக்காட்டை குறைக்க அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தயாரிக்கப்படும் ஆக்ஸிஜன் முதல்கட்டமாக அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.
சிங்கப்பூரிலிருந்து 248 காலி சிலிண்டர்கள் இந்திய விமானப்படை மூலம் தமிழ்நாடு வந்துள்ளது. கேரளாவிலிருந்து நிறுத்தப்பட்ட 40 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சேவை சரி செய்யப்படும். மொத்தத்தில் தமிழ்நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: சிப்காட் தொழிற்சாலை விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் - அமைச்சர் கணேசன்