வி௫துநகரைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு சிறுமி கே.நவநீதாஸ்ரீ (8) . இவர் சிறுவயது முதலே யோகாசனம் செய்வதில் ஆர்வம் காட்டியுள்ளார். யோகாசனத்தில் சாதனை புரிய முயற்சி மேற்கொண்டு வந்த இவர், இதற்காக நீ௫க்கு மேல் மிதந்தபடி பல்வேறு ஆசனங்களை செய்து விடாமுயற்சியுடன் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று தனியார் நீச்சல் குளத்தில் தண்ணீரில் மிதந்தபடி 5 நிமிடம் 56 வினாடிகளில் திரிவிக்ரம ஆசனம், கூர்மாசனம் போன்ற 37 வகையான ஆசனங்களை தொடர்ந்து செய்து இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை படைத்துள்ளார்.
இதையும் படிங்க: யோகாவில் உலக சாதனை படைத்த பள்ளி மாணவி!