கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஸ்ரீவில்லிபுத்தூர் மதுவிலக்கு டிஎஸ்பி ஸ்டீபன் உத்தரவின் பேரில் கடந்த ஒரு வாரமாக சாராயம், கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு ரோந்து பணியில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம் பகுதியில் மாந்தோப்பில் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு அமல் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து விரைந்து சென்ற அவர்கள் அந்தப் பகுதியில் 200 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை கண்டுபிடித்தனர்.
பின்னர் ஊறல் வைத்து சாராயம் காய்ச்சிய நெடுங்குளம் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரைக் கைது செய்து கிருஷ்ணன் கோவில் மதுவிலக்கு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கு ஏன் அதிக நிதி ஒதுக்கவில்லை? - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு