ETV Bharat / state

“ ராஜேந்திர பாலாஜிக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை ?” - சாட்டை சுழற்றும் எம்.எல்.ஏ

author img

By

Published : Dec 21, 2020, 11:05 PM IST

விருதுநகர் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆா்.ராஜவர்மன் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I dont need to be Slave for Rajendra Balaji Sattur  MLA Rajavarman
சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆா்.ராஜவர்மன்

விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அதிருப்தி கொண்டுள்ள நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று (டிச.21) நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன் தலைமைத் தாங்கினார்.

அக்கூட்டத்தில் பேசிய சாத்தூா் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.எஸ்.ஆா்.ராஜவா்மன் , “முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எதிர்க்கோட்டை சுப்பிரமணியன் அமமுக கட்சிக்கு ஆதரவு தெரிவித்தற்கு காரணமே தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான். இயக்கத்துக்கு உழைப்பவர்களை வைத்து இயக்கம் நடத்த வேண்டும். ஆனால் மாற்று கட்சியில் இருந்து வந்தவா்களை வைத்து இயக்கத்தை நடத்தினால் நன்றாக இருக்காது என பேரறிஞர் அண்ணா கூறியுள்ளார். தற்போது விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களை வைத்து கட்சி நடத்துகிறார்.

கட்சி நிர்வாகிகளிடம் என்னை பற்றியும், எனது ஆதரவாளர்கள் பற்றியும் தவறான தகவல்களை பரப்பி வருகிறார். கரோனா காலத்தில் மக்களுக்கு பணி செய்யவில்லை என பொதுமக்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்தால் உடனே நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயார்.

நான் பொதுமக்களை சந்தித்தது தவறு என்கிறார்கள். நான் சப்பானியாக இருந்தால் நிம்மதியாக இருக்கலாம். நாங்கள் உண்மையான தான் அதிமுகவினர். நாங்கள் மாற்றுக்கட்சி செல்ல மாட்டோம். கட்சிக்கு துரோகம் செய்பவா்களை விரட்டி அடிப்போம். நீங்கள் என்னை சட்டப்பேரவை உறுப்பினர் ஆக்கினால், உங்களுக்கு நான் அடிமையாக தான் இருக்க வேண்டுமா ? உருவாக்கிய நீங்களே என்னை அழிக்க நினைக்கலாமா ?

மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர நாங்கள் உழைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால் அமைச்சர் மற்றும் அவரது ஆட்கள் எங்களை தடுக்கிறரா்கள். என்னை பல்வேறு சமுதாய மக்களை வைத்து கொலை செய்துவிடுவேன் என அமைச்சர் பேசிய ஆடியோவை கொடுக்க வேண்டிய நேரத்தில் தலைமையிடம் கொடுப்போம். தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்து விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவை அழிக்க நினைக்கிறார். சமயம் வரும் போது தொண்டர்கள் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

விருதுநகா், சிவகாசி, இராஜபாளையம் ஆகிய மூன்று தொகுதிகளில் எந்த தொகுதியில் நின்றாலும் மக்கள் அவருக்கு பாடம் புகட்டுவார்கள். என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும், அவமானப்படுத்தினாலும் இந்த மக்களுக்காக என் உயிரைக் கூட கொடுக்க தயாராக இருக்கிறேன். அமைச்சருக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

உங்களுக்காக உழைக்கும் எனக்கு பல இடையூறுகளை ஏற்படுத்துகிறார்கள். அதில் குறிப்பாக காவல்துறையை வைத்து என்னை மிரட்டுகிறார். அமைச்சருக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அமைச்சர் எங்களை மதித்ததால் நாங்களும் மதிப்போம்.

என்னை ரவுடிகளை வைத்து அமைச்சர் கொலை மிரட்டல் விடுகிறார். தேவைபட்டால் அந்த ஆடியோவை வெளியிட தயார். எனது தொகுதியில் நடைபெறும் அரசு விழாக்களில் என்னை அழைப்பது இல்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கட்சியை அழிப்பதை மட்டுமே சிந்திக்கிறார்” என கூறினார்.

அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது சொந்த கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவா்மன் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருப்பது அஇஅதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கூட்டத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஒன்றிய செயலாளா்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டா்கள் என மொத்தம் 1000க்கு மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா்.

இதையும் படிங்க : 'அதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்க ஆயிரம் கோடி பேரம்'- தயாநிதி மாறன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.