ETV Bharat / state

நடத்தையில் சந்தேகம்:மனைவியை கழுத்தறுத்துக் கொன்ற கணவன் - மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்

விருதுநகர்: சிவகாசியில் பட்டப்பகலில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவனை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Husband who murdered his wife
Husband who murdered his wife
author img

By

Published : Jun 27, 2020, 9:13 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பள்ளபட்டி இந்திரா நகரில் வசிப்பவர் சரவணகுமார் (25) இவருடைய மனைவி ஜெயலட்சுமி (22). இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றரை வருடம் ஆன நிலையில், கயல் என்ற எட்டு மாத பெண் குழந்தை உள்ளது. சரவணகுமார் பட்டாசு தொழிற்சாலையில் வாகன ஓட்டுநர் ஆகவும், ஜெயலட்சுமி பட்டாசு தொழிற்சாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சரவணகுமார் தனது மனைவி ஜெயலட்சுமி நடத்தையில் சந்தேகமடைந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு, தொடர்ந்து தகராறு நடந்து வந்ததாகத் தெரிகிறது.

குடும்ப பிரச்னை முற்றியதால் ஆத்திரமடைந்த சரவணகுமார் வீட்டின் பின்புறம் வைத்து ஜெயலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர், கொலை நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வுநடத்தி ஜெயலட்சுமியின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சிவகாசி காவல்துறையினர் தப்பியோடிய சரவணகுமாரை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் கணவனே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் சிவகாசி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:வி.ஹெச்.பி. பிரமுகர் பட்டப்பகலில் படுகொலை! ஆன்லைனில் உலாவும் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.