விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெளர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கிய நிலையில் செக் குடியரசு நாட்டைச்(Czechia) சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் ஆன்மிகப் பயணமாக பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர்.
வனத்துறையினர் வெளிநாட்டினரை தீவிர சோதனை செய்த பின்னர் கோயிலுக்குச் செல்ல அனுமதி அளித்தனர்.
இதையும் படிங்க: ஓமன் மன்னர் சுல்தானுக்கு மயிலாடுதுறை குடும்பத்தினர் அஞ்சலி