விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள வட்டாட்சியர் அறையில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. அதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இருப்பினும் அறையிலிருந்த மேசை, நாற்காலிகள், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவை தீயில் கருகி சாம்பலாகின. மேலும் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குமரி சாக்கு குடோனில் தீ விபத்து!