விருதுநகர் மாவட்டம் எரிச்சநத்தம் பகுதியில் ராமர் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது, இந்த கல்குவாரியில் விதிமுறைகளை மீறி கல் எடுக்கப்படுவதாகவும், பொது சாலை வழி மற்றும் நீர்வரத்து பாதையை ஆக்கிரமித்து குவாரி செயல்படுவதாகவும் கூறி கோத்தகிரியை சேர்ந்த ராஜமன்னர் என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு பதிவு செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வந்த நிலையில் இந்த கல்குவாரியின் செயல்பாடு மற்றும் நிலை குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சிவஞானம் நேரில் ஆய்வு செய்து வருகின்ற 18ஆம் தேதிக்குள் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டதை அடுத்து இன்று மாவட்ட ஆட்சியர் சிவஞானம், சிவகாசி தாசில்தார் மற்றம் அரசு அதிகாரிகள் கல்குவாரியை நேரில் ஆய்வு செய்தனர்.