விருநகரில் திமுக மகளிர் அணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டதில் அக்கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்துகொண்டார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது கூட பெண்களுக்கு சில நல்ல திட்டங்கள் கொண்டு வந்தார் என்றும், தற்போது ஆட்சியில் இருப்பவர்களால், பெண்களுக்காக ஏதாவது ஒரு நல்ல திட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறதா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், “இளம்பெண்களுக்கு தற்போது பாதுகாப்பில்லை. வீட்டிலும், வெளியிலும் பெண்கள் பல துன்பங்களுக்கு ஆளாகிவருகிறார்கள். இதனைத் தடுக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மத்தியிலுள்ள பாஜக அரசிடம், தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் விட்டுக் கொடுக்கக் கூடிய ஒரு ஆட்சிதான் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுகவின் சிஏஏ சட்டத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கத்தில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் கையெழுத்திட்டனர். இந்தச் சட்டத்தால் மிக மோசமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான்” என்றார்.
இதையும் படிங்க: ஈரோட்டில் சிஏஏவிற்கு எதிராக 3ஆவது நாளாக இஸ்லாமியர்கள் தொடர் போராட்டம்