விருதுநகர் மாவட்டம் அருகே மருளுத்து பகுதியில் வைரமுத்து என்பவருக்குச் சொந்தமான 9 ஏக்கர் விவசாய நிலத்தில் லட்சக்கணக்கில் வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால் 3 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள சோளப் பயிர்கள் முழுவதும் நாசமாகியுள்ளன.
பச்சை, மஞ்சள் என வெவ்வேறு வகையான வெட்டுக்கிளிகள் விவசாய நிலத்தில் காணப்படுகின்றன. ஏக்கருக்கு 8 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் பயிர்கள் நாசமாகியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
வெட்டுக்கிளிகள் குறித்து வேளாண் துறையினர் ஆய்வு செய்து, விவசாய நிலத்தில் வெட்டுக்கிளிகள் படை எடுப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: உசிலம்பட்டியில் படையெடுத்தவை நாட்டு வெட்டுக்கிளிகளே - ஆர்.பி.உதயகுமார்!