விருதுநகர்: ராஜபாளையம் முகவூர் முத்துசாமிபுரம் சாலியர் தெரு பகுதியில் கரோனா பரவல் காரணமாக 10க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து, அப்பகுதியில் தடுப்பு வேலிகள் அமைத்து கட்டுப்பாட்டு பகுதியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் அறிவித்தனர். மேலும், சுகாதாரத் துறை சார்பில் அப்பகுதியில் இதுவரை கிருமி நாசினி மருந்து தெளித்தல் மற்றும் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து தலைவரிடம் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். இதுவரை, சுகாதாரத்தை மேம்படுத்த எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
அலுவலர்களின் அலட்சியத்தால் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்த பகுதியில் இருந்து மக்கள் பலரும் இயல்பாக வெளியில் சுற்றித் திரிவதால் மேலும் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: முழு ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிப்பீர்!' - முதலமைச்சர் வேண்டுகோள்!