தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவிவருகிறது. இந்தக் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இதனால் பல ஏழை எளிய குடும்பத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டுவருகின்றனர்.
இவர்களுக்குப் பல்வேறு தன்னார்வ அமைப்புகள் உதவிகள் செய்துவருகின்றன. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வாழ வந்தாள்புரம், சாமியார் காலனி, சிலோன் காலனி அணைகரைபட்டி, அமீர் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 3500 ஏழை எளிய குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்பட்டன.
இதில் கலந்துகொண்ட பயனாளிகள் ஏராளமானோர் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் வாங்கிச் சென்றனர்.
இதையும் படிங்க: ஆக்சிஜனை தடுப்பவர்களுக்குத் தூக்குத் தண்டனை: டெல்லி உயர் நீதிமன்றம்