விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் இன்று(ஜூலை.17) புதிதாக மாவட்டத்தில் 196 பேருக்கு தோற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,948 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் இதுவரை 1,065 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ள நிலையில், 1,859 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தொற்றின் காரணமாக தற்போது வரை 24 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.