ETV Bharat / state

மருத்துவமனையிலிருந்து தப்பியோடிய கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் - மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடிய கரோனா நோயாளி

விருதுநகர்: அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்று வந்த நபர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து தப்பி ஓடியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Corona patient runs away from hospital at virudhunagar

author img

By

Published : Jun 21, 2020, 9:52 PM IST

Updated : Jun 22, 2020, 3:02 AM IST

விருதுநகர் காந்திபுரம் பகுதியை சேர்ந்த 28 வயது இளைஞர் அம்மாவட்டத்தில் ஆக்டிங் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை கரோனா வார்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் அவர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

உடனடியாக காவல் துறையினருக்கு அரசு மருத்துவமனையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து விருதுநகர் மேற்கு காவல் துறையினர் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

பின்னர் காவல் துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபர் தப்பி ஓடிய சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jun 22, 2020, 3:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.