பல்வேறு பிரச்னைகளுக்குப் பின்னர் மறைமுகத் தேர்தல் நடந்தப்பட்டு புதிய தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தின் முதல் கூட்டம் இன்று அதன் ஒன்றியக் கூட்டரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி கூட்டத்தில் பங்கேற்க அதிமுக, திமுக கூட்டணி ஒன்றிய கவுன்சிலர்கள் என மொத்தம் 19 ஒன்றிய கவுன்சிலர்கள் வந்திருந்தனர். கோவிட்-19 பெருந்தொற்று பரவலை அடுத்து முன்னெச்சரிக்கையாக முகக்கவசம் அணிந்துகொண்டு அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் கூட்டத்திற்கு வந்தனர்.
கூட்டத்திற்கு வந்திருந்த ஒன்றிய கவுன்சிலர்கள், பணியாளர்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனைசெய்யப்பட்டது.
இதற்கிடையில் கரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கூட்டங்களை ரத்துசெய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்த காரணத்தினால் ஒன்றியக் கூட்டம் தொடக்கப்படாமலேயே ரத்துசெய்யப்பட்டது. முதல் நாள் கூட்டத்திற்கு ஆர்வமுடன் வந்த ஒன்றிய கவுன்சிலர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.
இதையும் படிங்க : கரோனாவால் கோழிக்கறி விற்பனை சரிவு