விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே 5 ஆயிரத்து 574 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ள நிலையில் நேற்று (ஜூலை26) மேலும் 385 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதன் காரணமாக இதுவரை 5 ஆயிரத்து 959 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மூன்று ஆயிரத்து 290 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், இரண்டு ஆயிரத்து 612 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற பகுதியில் உள்ள சிறப்பு கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இத்தொற்றின் காரணமாக நேற்று மட்டும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது.