விருதுநகர் மாவட்டம் வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்துக்குள்பட்ட சண்முகசுந்தர கிராமத்தில் மோட்டார் பழுது மற்றும் பராமரிப்பு இல்லாததால் கடந்த 2 மாதங்களாக அக்கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனை பழுதுபார்ப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யாமல் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அனந்தராமன் உதாசினப்படுத்தியதாகத் தெரிகிறது.
இதுதொடர்பாக 9ஆவது வார்டு உறுப்பினர் ராஜேஸ்வரி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணனிடம் தொலைபேசியின் வாயிலாகத் தொடர்புகொண்டு குடிநீர் பிரச்னை குறித்து பேசியுள்ளார். சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. தண்ணீர் இல்லாமல் சிறுவர் முதல் பெரியவர் வரை கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார்.
அப்போது ஆட்சியர் கண்ணன் மிரட்டும் தொனியில், "நீங்க யார்கிட்ட பேசுறீங்கன்னு தெரியுமா? சத்தமா பேசுற, என்னை என்ன சொல்றீங்க, தீர்மானம் கொண்டுவந்து அவரைப் பதவியிலிருந்து தூக்குங்க" என அலட்சியமாகப் பதிலளித்துள்ளார்.
பொதுமக்களின் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க விரும்பி மக்கள் பிரதிநிதியாக மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொண்டு பேசிய பெண் வார்டு உறுப்பினரிடம் ஆட்சியர் இவ்வாறு பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: எஸ்பிபி உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்