விருதுநகர் : நெல்லை மாவட்டத்திற்கு உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைக்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார். அப்போது, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வெங்கடாசலபுரம் தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உடனிருந்தனர்.
அப்போது, கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒழிக என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கூட்டத்தில் இருந்த முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்களுக்கும், கிழக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆதரவாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
பின்னர், இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து, உடனடியாக காவல் துறையினர் தலையிட்டு இரு தரப்பு தொண்டர்களையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க : உள்ளாட்சித் தேர்தல்: அதிமுகவுக்கு விளக்கம் அளிக்கும்படி ஆணையத்திற்கு உத்தரவு