ETV Bharat / state

அருப்புக்கோட்டையில் சங்கிலி பறிப்பு திருடர்கள் கைது - Aruppukottai

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பல்வேறு செயின் பறிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Chain snatchers
Chain snatchers
author img

By

Published : Nov 14, 2021, 8:39 PM IST

விருதுநகர் : அருப்புக்கோட்டையில் பல்வேறு சங்கிலி பறிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 5 பேர் கைது செய்து குற்றப்பிரிவு தனிப்படை காவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக எஸ்பிகே ஸ்கூல் ரோடு, பெர்கின்ஸ்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத வீதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து பல்வேறு சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றன.

அடுத்தடுத்து நடைபெற்ற சங்கிலி பறிப்பு சம்பவங்களை தொடர்ந்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் மனோகர் உத்தரவுப்படி நகர் காவல்நிலைய ஆய்வாளர் பாலமுருகன் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ராஜபுஷ்பா தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

சிசிடிவி கேமராக்களில் காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை காவலர்கள் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தநிலையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதாக பாலாஜி (22), அசோக்குமார் (19), அருண் (22), மதன்ராஜ் (22), பாபுரிஷிகண்ணன் (20) ஆகிய 5 இளைஞர்கள் பிடித்து
விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அவர்கள் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 21 3/4 சவரன் தங்கநகை மற்றும் செயின் பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், கத்தி உள்ளிட்டவைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க : நகை வாங்குவது போல் நடித்து ஒன்றரை பவுன் செயின் திருட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.