விருதுநகர்: விருதுநகரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் நேற்று முந்தினம் (ஜூலை 19) இரவு பூஜைகள் முடிந்து கோயில் நடை சாத்தப்பட்டது.
இதையடுத்து கோயிலில் இரவு காவலராக பணி புரியும் நபர், நேற்று (ஜூலை 20) அதிகாலை 5.30 மணியளவில், கோயிலுக்குள் சென்று பார்த்த போது, கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த காணிக்கைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனை உடனடியாக அறநிலையத்துறைக்கும்; காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவ்விடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் கோயிலிலுள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து, திருட்டில் ஈடுபட்ட நபரை பஜார் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரூ. 3 லட்சம் குட்கா பறிமுதல்!