ETV Bharat / state

வேட்பாளரை அறிவித்த பாஜக - அதிமுக கூட்டணியில் குழப்பமா?

அதிமுக கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு செய்யப்படாத நிலையில் நடிகை கௌதமியை ராஜபாளையம் தொகுதி வேட்பாளர் என தமிழ்நாடு பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி அறிவித்ததால் கூட்டணி கட்சியினர் இடையே குழப்பம் ஏற்பட்டது.

தொகுதி பங்கீடு செய்யப்படாத நிலையில் வேட்பாளரை அறிவித்த பாஜக - அதிமுக கூட்டணியில் குழப்பமா?

author img

By

Published : Feb 28, 2021, 11:50 AM IST

விருதுநகர் : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் நடிகை கௌதமி வேட்பாளராக களமிறக்கப்படுவார் என அக்கட்சியின் தமிழ்நாடு தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக மேலிட தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் அக்கட்சியின் தேர்தல் ஆலோசனை கூட்டம் நேற்று (பிப்.28) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சுதாகர் ரெட்டி, “ இராஜபாளையம் சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை கௌதமியை கூட்டணிக் கட்சியினர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும். அனைவரும் அதற்காக பாடுபட வேண்டும்” என வலியுறுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கெளதமியை களமிறக்க முடிவு எடுத்துள்ளோம். இதுதொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடு செய்யப்படாத நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்காமல் பாஜகவின் தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, நடிகை கௌதமியை வேட்பாளர் என அறிவித்தது கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்படுத்தியது.

இதையும் படிங்க : அரசியல் கட்சிகளின் கொடி மரங்களை அகற்ற உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.