ETV Bharat / state

’மருத்துவ செலவுக்கு காசில்ல’ - குமுறும் பேக்கரி உரிமையாளர்!

author img

By

Published : Aug 11, 2020, 8:41 PM IST

விருதுநகர்: பேக்கரி தொழிலின் மூலம் மருத்துவ செலவிற்கு கூட போதுமான வருமானம் ஈட்ட முடியவில்லை என பேக்கரி தொழில் செய்யும் ஒருவர் வேதனை தெரிவிக்கிறார்.

பேக்கரி உரிமையாளர்!
பேக்கரி உரிமையாளர்!

தமிழர்களின் விருந்தோம்பலில் முக்கியமான ஒன்று இனிப்பு வகைகளைப் பரிசளிப்பது. ஒருவர் வீட்டுக்கு செல்லும் போது வெறும் கையோடு செல்லக்கூடாது என கையில் இனிப்பு, காரம் என வீட்டில் உள்ள இளசுகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றார் போல தின்பண்டங்களை வாங்கிச் செல்வதை பெரும்பாலானோர் வாடிக்கையாகவே வைத்திருப்பர்.

ஆனால், கரோனா அனைவரையும் வீட்டிலேயே முடக்கியது. மிக முக்கியமாக சுகாதாரத்தின் நிமித்தம் பெரும்பாலானோர் பேக்கரி, இனிப்பு வகைகளை விற்கும் கடைகளை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர். ஊரடங்கு ஆரம்ப கட்டத்தில் பேக்கரிகளுக்கு அனுமதியில்லை. ஆனால் அடுத்தடுத்த தளர்வுகளில் இது சாத்தியப்பட்டாலும், வியாபாரமின்றி அதைத் திறந்து வைத்திருப்பது வீண் தானே என மனம் நொந்து கொள்கிறார், வியாபாரி ஒருவர்.

பேக்கரி வைத்திருப்பது அத்தனை சுலபமான காரியமும் அல்ல. பிறந்தநாள் கேக்குகளை வாங்குபவர்கள் முதல் பப்ஸ் வாங்குபவர் வரை அனைத்து வாடிக்கையாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். காலத்தின் போக்குக்கு ஏற்றார் போல நொறுக்குத்தீனிகளின் வகைகளையும் மேம்படுத்த வேண்டும். அப்பப்பா... பேக்கரி நடத்துபவர்களுக்குத்தான் எத்தனை டாஸ்க். இந்நிலையில், கரோனா ஊரடங்கு வேறு அவர்கள் தலையில் பேரிடியாக விழுந்தது.

இது குறித்து பேக்கரி உரிமையாளர் முத்தையாவிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரை கண்டிராத மிகப்பெரிய தொழில் முடக்கம். வியாபாரம் முற்றிலும் மந்தமாகி போனது. போட்ட முதலீட்டை எடுப்பதற்கே மிகவும் சிரமமாக உள்ளது. வேறு வழியின்றி பேக்கரி தொழிலை தொடர்ந்து செய்கிறேன். வீட்டு செலவு மட்டுமில்லை, மருத்துவ செலவு, பள்ளிக் கட்டணம் என எதற்கும் பணமில்லை” என்கிறார்.

’மருத்துவ செலவுக்கும் காசில்ல’ - குமுறும் பேக்கரி உரிமையாளர்!

சொற்ப வருமானம் கூட இல்லாமல் வாடும் முத்தையா, ஒட்டுமொத்தமாக அனைத்து பேக்கரி உரிமையாளர்களையும் பிரதிபலிக்கிறார். நிலைமை சரியாகி இயல்பான நிலை வந்தால் மட்டுமே முத்தையாக்களின் இனிப்பு வியாபாரம் களைகட்டும்.

இதையும் படிங்க:'கரோனா கேக், மாஸ்க் பரோட்டா, கரோனா தோசை' - பட்டையைக் கிளப்பும் விருதுநகர் ஹோட்டல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.