விருதுநகர் : சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணைகிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிட தொழிலாளி ரமேஷ். இவருக்கு ஐந்து வயதில் ஆண் குழந்தையும், திரேஷா என்ற 3 வயது பெண்குழந்தையும் உள்ளனர். இவரின் மனைவி கல்பனா தனது வீட்டு அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்கும் போது குழந்தையும் உடன் இருப்பது வழக்கம்.
இந்நிலையில், பொம்மையுடன் அந்தக் கிணற்றின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த குழந்தை காணாமல் போனாதால் கல்பனா அதிர்ச்சியடைந்தார்.
குழந்தை கிணற்றிற்குள் விழுந்து இருக்கலாம் என சந்தேகத்தில் வெம்பக்கோட்டை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதனையடுத்து, அங்கு சென்ற தீயணைப்புத் துறை அலுவலர் காந்தையா தலைமையிலான வீரர்கள், சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கிணற்றிலிருந்து குழந்தையை சடலமாக மீட்டனர்.இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: புலிகள் காப்பக வனப்பகுதியில் காட்டுத்தீ!