விருதுநகர்அய்யனார் நகர் பகுதியில் சுமார் 150க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும தங்களது வீட்டுவாசலில் 'எங்கள் வீட்டில் அனைவரும் ஐயப்ப சாமி கும்பிடுபவர்கள். அதனால் திமுக - கம்யூனிஸ்ட் கூட்டணியைச் சேர்ந்தகட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வராதீங்க' என்ற வாசகம் அடங்கிய நோட்டீஸைஒட்டியுள்ளனர்.
இது அந்தப்பகுதியில் உள்ள திமுக - கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சியினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் சென்று வரலாம் என்றஉச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அம்மாநிலத்தின் ஆளும் கட்சியான கம்யூனிஸ்ட் பெண்களை அனுமதித்தது.இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இந்த நோட்டீஸ்ஒட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.