விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் பகல் பத்து உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் உற்சவத்தின் முதல் நிகழ்வாக பச்சை பரத்துதல் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது.
இந்த பகல் பத்து உற்சவத்தைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான பரமபத வாசல் திறக்கு நிகழ்ச்சி வரும் ஜனவரி ஆறாம் தேதி காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. அன்று மாலையே இராப்பத்து எனப்படும் நிகழ்ச்சி தொடங்கும்.
அதன்பின் ஜனவரி எட்டாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை எண்ணெய் காப்பு உற்சவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 20 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஆண்டாள் தங்க பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதில் கலந்துகொள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிவார்கள்.
இதையும் படிங்க: சூரிய கிரகணம் நிகழ்வதால் ஆண்டாள் கோயில் நடை மூடல்