விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி அமமுக கட்சியின் வேட்பாளர் பரமசிவன் ஐயப்பன் நேற்று பரிசுப்பெட்டகத்திற்கு வாக்காளர்களிடம் வாக்குகள் சேகரித்து பரப்புரையை மேற்கொண்டார்.
தொடர்ந்து மதுரை அவனியாபுரத்தில் உள்ள முத்துராமலிங்கம் தேவர் மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பரமசிவன் ஐயப்பன் பேசுகையில்,
’விருதுநகர் தொகுதியை பொறுத்தவரையில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். எதிர்க்கட்சியினர் வீடுகளில் வருமானவரித் துறை சோதனை என்ற பெயரில் ஆளும் அரசு மிரட்டி வருகிறது.
சின்னம் எதுவாயினும் மக்களின் அடையாளம் டிடிவி தினகரன்-தான். தொப்பி சின்னமானாலும் சரி, குக்கர் சின்னமானாலும் சரி பிரபலப்படுத்தி வென்றதை போன்று தற்போது கிடைத்துள்ள பரிசுப்பெட்டக சின்னத்தையும் வாக்காளர்களிடம் பிரபலப்படுத்தி நிச்சயம் வெற்றி பெறுவோம்’ என்று கூறினார்.