பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு மதுரை செல்லும்வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் அதிமுக விருதுநகர் மாவட்ட கிளை சார்பிலும் மாவட்ட தொண்டர்கள் சார்பிலும் வரவேற்பளிக்கப்பட்டது.
இதற்காக ஆத்திப்பட்டி பகுதியில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சார்பாக ஒரு பிரிவினரும் அதே ஊரில் காந்தி நகர் அருகில் சாத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜவர்மன் தலைமையில் மற்றொரு பிரிவினரும் என இரண்டு அணிகளாக வரவேற்பளித்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவில் இருவேறு அணிகளாகப் பிரிந்து வெவ்வேறு இடங்களில் வரவேற்பு அளித்ததோடு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சாலையில் கூடியதால் காவல் துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது கட்சி தொண்டர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இரண்டு அணிகளாகப் பிரிந்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்த அதிமுகவினர் - முதலமைச்சருக்கு வரவேற்பு
விருதுநகர்: அதிமுகவினர் இரு அணிகளாகப் பிரிந்து முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர்.