விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள சின்னகாமன்பட்டியைச் சேர்ந்த பிரபாகர் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கிவருகிறது. இந்த ஆலையை தற்போது ராஜ்குமார் - அமராவதி தம்பதியினா் நடத்திவருகின்றனா். இந்த பட்டாசு ஆலையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி காலையில் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் வழக்கம்போல் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டுவந்தனர். பட்டாசு ஆலையில் வெளிப்புறத்திலுள்ள ஒரு அறையில் விதிகளுக்கு மாறாக பேன்சி ரக பட்டாசுகளை தயார் செய்யும் திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தின் காரணமாக, ஆலையிலுள்ள இரு அறைகளும் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. இதில் மீனம்பட்டியைச் சோ்ந்த கார்த்திக் (16), பாண்டிராஜன் (28), வெள்ளைச்சாமி (55) ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஆறு பேர் பலத்த தீக்காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனிற்றி மேட்டமலையைச் சேர்ந்த வள்ளியம்மாள் (50), முத்துலட்சுமி (38), சின்னக்காமன்பட்டியைச் சேர்ந்த விஜயகுமார் (38) ஆகியோர் உயிரிழந்தனர். இதன் காரணமாக சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: 'ஒரே இரவில் 18 செல்போன்கள் ', 'திருவொற்றியூர் முதல் கடற்கரை வரை'- அதிரவைத்த திருடனின் வாக்குமூலம்!