ETV Bharat / state

மான்களால் விவசாயத்தை கைவிடும் சூழலில் இயற்கை விவசாயி.. சிவகாசி குருசாமியின் வேதனை! - வெம்பக்கோட்டை

சிவகாசி என்றாலே எல்லோருக்கும் தெரியும் அது கந்தக பூமி என்று. மேலும் அங்கு அடிப்படைத் தொழில் பட்டாசு. சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சூழ்ந்திருப்பது அதிகப்படியான பட்டாசு ஆலைகளும் பட்டாசுத் தொழிலாளர்களும் மட்டும் தான். இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் அகன்ற பரப்பளவில் பாதிக்கு மேல் நிலத்தை சூழ்ந்திருப்பது கருவேல மரங்கள். அப்படிப்பட்ட பூமியில் விவசாயம் செய்து அறுவடை செய்த பொருட்களை வீடு கொண்டுச் சென்று சேர்ப்பதற்குள் அவர்கள் படும் துயரத்தையும், போராடி மீட்கின்ற பயிர்களையும் பற்றி விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 4, 2023, 10:31 PM IST

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள இறவார்பட்டி என்கிற கிராமத்தில் வசித்து வருபவர் குருசாமி. இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவருக்கு அவருடைய கிராமத்திலிருந்து 3 கிமீ, தொலைவில் சொந்த தோட்டம் ஒன்று உள்ளது. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் வருடம் தவறாது விவசாயம் செய்து வருகிறார். இவர் காலை விடிந்தது முதல் பொழுது சாயும் வரை வரை தனது தோட்டத்திலேயே பொழுதைக் கழித்து வருகிறார். உடன் இவருடைய மனைவி குருவம்மாள் நாற்று நடுவது, களை எடுப்பது, அறுவடை செய்வது போன்ற விவசாய வேலைகளைத் தனது கணவருடன் சேர்ந்து செய்து வருகிறார்.

காலநிலை பருவங்களில் மக்காச்சோளம் பயிரிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் இயற்கை விவசாயி குருசாமி. கடந்த ஐப்பசி மாதம் தன்னுடைய தோட்டத்தில் நான்கு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளப் பயிரை நடவு செய்து பாதுகாத்து வந்தார். இவருடைய தோட்டத்தைச் சுற்றி கருவேலமரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் விவசாயம் செய்து வருகிறார். இதனால் இயற்கையாகத் தான் விவசாயம் செய்யும் பாதியைக் காட்டு விலங்குகளும் பரவைகளும் எடுத்துச் செல்லும் போதிலும் தன் பாரம்பரியத்தை விட்டுக்கொடுக்காமல் விடாப்பிடியோடு போராடி விவசாயம் செய்து வருகிறார்.

இவருடைய தோட்டத்தின் அமைப்பு காரணமாகவும், அவரைத் தவிரப் பக்கத்தில் யாரும் விவசாயம் செய்யாமல் நிலத்தை வேலிகள் போட்டதன் விளைவாக, தான் நடவு செய்த நாள் முதல் பயிரை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் நாள் வரை அழிவுகளைச் சந்திப்பதாக வேதனை தெரிவிக்கிறார் குருசாமி. நடவு செய்த அடுத்த கனமே மயில் விதையை வரிசை பிறழாமல் எடுத்து உண்ண, அதிலிருந்து தப்பி முளைத்து வரும் பயிர்களை அணில்கள் வந்து வேட்டையாடுகிறது. இதையெல்லாம் கூட பொறுத்துக்கொள்வேன் ஆனால், சிறிது மனசாட்சியின்றி மான்கள் கூட்டம் கூட்டமாக வந்து பயிர்களைத் துவம்சம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என கனத்த இதயத்துடன் கூறுகிறார் விவசாயி குருசாமி.

அட என்னடா.! கந்தக பூமியில் மான்..ஆ..! நீங்கள் யோசிக்கலாம். ஆமாம், கடந்த 15 வருடங்களுக்கு முன்னதாகவே சிறிய கூட்டங்களுடன் சுற்றித் திரிவதைப் பார்த்ததாகத் தெரிவிக்கிறார் விவசாயி குருசாமி. அவை மேற்குத் தொடர்ச்சி மலைகளிலிருந்து வந்ததாகக் குறிப்பிடுகிறார். காலப்போக்கில் மான்களின் இனப்பெருக்க வளர்ச்சியால் தற்போது வெம்பக்கோட்டை வைப்பாற்றுப்படுகையிலிருந்து சாத்தூர் வரை ஆற்றின் கரையோரங்களில் வசித்து வருவதாகத் தெரிவிக்கிறார்.

இவற்றின் வளர்ச்சி குறிப்பிட்ட காலத்திற்குள் அசுர வேகத்தில் வளர்ந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். தற்போது மான்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்றும் கணிக்கிறார் குருசாமி மற்றும் அப்பகுதி மக்கள். இதுமட்டுமில்லாமல் காட்டுப்பன்றிகளின் அட்டகாசமும் அவற்றின் செயல்களைப் பற்றியும் பிரமித்து விவரிக்கிறார் குருசாமி. காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசம் செய்வது மட்டுமல்லாமல் தரையை உழவு செய்ததுபோல் வரப்பைக் குளறுபடி செய்து வாய்க்கால் வரப்பே இல்லாத அளவுக்கு அதன் அட்டகாசத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பரிதவித்து நிற்கிறார் இயற்கை விவசாயி குருசாமி.

இவற்றையெல்லாம் கட்டுப்படுத்துவதற்கு, முதலில் நடவு செய்தவுடன் மயில் மற்றும் அணில்களிடமிருந்து காப்பதற்கு நிலத்தைச் சுற்றி கம்புகளை ஊன்றி சேலைகளைக் கட்டி அதைப் பறக்கச் செய்தால் வராது என்று வெள்ளை துணிகளைக் கட்டினேன் என்றும் அடுத்தபடியாக மான் மற்றும் காட்டுப்பன்றிகளிடமிருந்து காப்பாற்றிக்கொள்வதற்காக, இரவில் வந்து டார்ச் லைட் வைத்து வெடி வைத்து விரட்டி விடுவது போன்ற செயலில் வருடம் வருடம் ஈடுபட்டு வருவது தொடர் கதையாகிவிட்டது என்றும் குமுறுகிறார். இவ்வாறெல்லாம் தொடர்ந்து செய்து வந்ததால், நாங்கள் விரட்டிவிட்டு வீட்டிற்கு வந்த பிறகு மறுபடியும் வந்து அட்டகாசம் செய்வது, அதுவும் பழகிக்கொண்டது என்று வருத்தத்துடன் சொல்கிறார்.

இதற்கு அடுத்தகட்டமாக மான்களை விரட்டுவதற்கு இரவில் காட்டிற்கு சென்று ஓலமிடுவது, மேலும் சத்தமான ஒலிபெருக்கிகளைக் கொண்டு விரட்டுவது போன்ற செயல்களைச் செய்து வந்தேன் என்கிறார். ஆனால் எதற்கும் அஞ்சாமல் அதன் வேலையைச் சரியாக நுனுக்கமாக செய்து வருகிறது என்று இதற்கு ஒரு முடிவு தெரியாமல் இரவு நேரங்களில் காட்டில் அலைந்து வருகிறேன் என்று வருத்தத்துடன் பதிவு செய்கிறார் விவசாயி குருசாமி. இதனை கட்டுப்படுத்துவதற்கு வன விலங்குகள் காப்பகத்தில் புகார் அளித்திருந்தேன். அப்போது அவர்கள் சொன்னது உங்கள் நிலத்தைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள். நிலத்தைச் சுற்றி வளர்ந்திருக்கும் வேலி மரங்களை அகற்ற முடியாத நிலையில் பாதுகாப்பு வேலி எங்கே போய் அமைப்பது என்று புன்முறுவலுடன் வீடு வந்து சேர்ந்தேன் என்கிறார்.

"கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அறம் அறக்கட்டளை என்கின்ற சமூக ஆர்வலர்கள் அமைப்பு 50 ஆண்டுக்காலம் இயற்கை விவசாயம் செய்ததற்காக என்னைத் தேர்ந்தெடுத்து அதிகாரிகளுக்கு மத்தியில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு 'நம்மாழ்வார்’ விருது வழங்கப்பட்டது. அப்போது எனக்குள் இருந்த உத்வேகம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும் என்றிருந்தது. குறிப்பாகச் செயற்கை மருந்துகளைத் தவிர்த்து பஞ்சகாவியங்களைத் தெளிப்பது, செயற்கை உரங்களை தவிர்த்து மாட்டு சாணம், ஆட்டுக்குப்பை போன்ற இயற்கை சார்ந்த பயன்பாடுகள் என்னுடைய விவசாயத்தொழிலில் அதிகரித்திருந்தது.

இயற்கை விவசாயி விருது பெற்ற குருசாமி
இயற்கை விவசாயி விருது பெற்ற குருசாமி

அப்போது இருந்த உத்வேகம் தற்போது நடக்கும் வனவிலங்குகளின் அழிவுகளும் சூழலியல் காரணங்களும் என்னை விவசாயத்தை விட்டு விடலாம் என்கின்ற சிந்தனை தற்போது எனக்குள் எழுகிறது. எங்கள் பகுதிகளில் மலை இல்லை தண்ணீர் இல்லை என்று விவசாயத்தைக் கைவிட்டவர்கள் பலர். ஆனால், நான் அப்படிப்பட்ட சூழல்களை எல்லாம் கடந்து வந்த போதும், தற்போது நான் பயிரிட்ட மக்காச்சோளத்தை தினந்தினம் பார்க்கும்போது எனக்குள் இருந்த கடைசி வைராக்கியமும் போய்விட்டது" என்று மெய் வருந்துகிறார்.

சரி, இதற்கான தீர்வு என்ன என்று கேட்டபோது, "வெம்பக்கோட்டை முதல் சாத்தூர் வரையில் வைப்பாற்றில் சூழ்ந்திருக்கும் கருவேலமரங்களை அகற்றினால், அங்கே குடியிருக்கும் வனவிலங்குகள் அனைத்தும் கலைந்துவிடும். இந்த ஒரு தீர்ப்பை தனி ஒரு விவசாயியாக கூறவில்லை. கருவேலி மரங்களை அகற்றக்கோரி கோர்ட்டுகள் உத்தரவிட்டிருப்பதும் கூட.. ஆகையால், கந்தக பூமியை பசுமை நிறைந்த பூமியாக மாற்றுவதற்கான வேலையைக் கையில் எடுக்கும் வரை தினம்தினம் ஒரு விவசாயி விவசாயத்தை கைவிட்டுக்கொண்டுதான் இருப்பான்" என்று வேதனையுடன் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.