விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில், ஆண் உடல் ஒன்று கிடப்பதாக அம்மாவட்ட ரயில்வே காவல் துறையினருக்கு அப்பகுதியினர் தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல் துறையினர், உடலை கைப்பற்றி அம்மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
40 வயது மதிக்கத்தக்க அந்த ஆண் உடல் தலை சிதறி அடையாளம் காண முடியாத அளவிலும், அழுகிய நிலையிலும் இருந்ததால் இறந்தவர் யார் என்பது குறித்து கண்டறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இது தற்கொலையா அல்லது கொலையா அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து ரயில்வே காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:
சேலத்தில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட வெடிபொருள்கள் பறிமுதல் : இருவர் கைது