விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை ஏழு மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்தது. வாக்காளர்களும் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
இந்தத் தேர்தலில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 184 வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், சத்திரபட்டி ஊராட்சி மன்றத்தில் உள்ள அமீர்பாளையம் வாக்குச்சாவடி மையத்தில் அமீர்பாளையம் பகுதியைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி கோட்டை மாரியம்மாள் நடக்க முடியாத நிலையிலும், சக்கர நாற்காலியில் வந்து தன்னுடைய வாக்கை செலுத்தி தன்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றினார். முடியாத வயதிலும் தனது வாக்கை செலுத்தியது மற்ற வாக்காளர்களிடையை ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: ‘ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் நாட்டின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்’