விருதுநகர் இளம்பெண் கூட்டுப்பாலியல் வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். மேலும், இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு திருவில்லிபுத்தூர் வன்கொடுமைத் தடுப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார்.
2ஆவது நாளாக விசாரணை: இந்த நிலையில் இன்று (மார்ச் 31) சிபிசிஐடி அலுவலகத்திற்கு 4 பேரை அழைத்து வந்து 2ஆவது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இளம்பெண் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனின் செல்போனை சிபிசிஐடி போலீசார் கைப்பற்றி சைபர் கிரைம் போலீசார் ஆய்வுசெய்தபோது, ஹரிஹரனிடம் அதிக நேரம் போனில் தொடர்பில் இருந்த நண்பரிடம் சிபிசிஐடி போலீசார் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் இந்த விசாரணையின்போது ஹரிஹரன் நண்பர்கள் மேலும் ஒரு சிலரை விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
தடயங்களை கைப்பற்றும் பணி: திருவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி கோபிநாத், ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசாருக்கு அனுமதி வழங்கிய நிலையில், மாடசாமியை அவரது வீட்டிற்கு அழைத்துச்சென்று 3 மணி நேரம் வரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது சிபிசிஐடி டி.எஸ்.பி வினோதினி முன்னிலையில், மாடசாமி வீடு மற்றும் அவரது வீட்டின் அருகில் உள்ள பாலியல் வன்புணர்வினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் வீட்டிற்கு அழைத்துச்சென்று நேரடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவ இடத்தில் இருந்த தடயங்களை சேகரித்தனர்.
இதையும் படிங்க: பிரதமரிடம் வைத்த கோரிக்கைகள் என்ன - முதலமைச்சர் விளக்கம்