விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள வடக்கநந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன். லாரி ஓட்டுநரான இவர், தினமும் குடித்துவிட்டு மனைவி பாரதியிடம் சண்டையிடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இதேபோல் நேற்றும் குடித்துவிட்டு பாரதியிடம் தகராறில் ஈடுபட்டபோது கணவரை, பாரதி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் அருகில் இருந்த அரிவாளை எடுத்து மனைவியை வெட்டியுள்ளார். பாரதி தலையில் ரத்தம் வழிந்ததைக் கண்ட சீனிவாசன் தனது மனைவி எங்கு இறந்து விடுவாரோ என்ற பயத்தில் வீட்டிற்குள் சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மயக்கநிலையில் கிடந்த பாரதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, சீனிவாசனின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: உணவில் கிடந்த முடி - கோபத்தில் மனைவிக்கு மொட்டை போட்ட கணவன்!