விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் செந்தில் (26). இவர் தொடர்ந்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது பெரியதச்சூர் காவல் நிலையத்தில் சாராயம், மதுபானங்களை கடத்தல், விற்றல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே, இவரது நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, செந்திலை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
அதனடிப்படையில், பெரியதச்சூர் காவல் ஆய்வாளர் ஜோதி குற்றவாளி செந்திலை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தார்.
இதையும் படிங்க: பேவர் பிளாக் செங்கல் தயாரிக்க ஆலோசனைக் கூட்டம்