ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக ரத்த கொடையாளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பல்வேறு இடங்களில் ரத்த தானம் பற்றிய விழிப்புணர்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகிறது.
இதையடுத்து, விழுப்புரத்தில் இன்று மருத்துவக் கல்லூரி, தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவியர் கலந்துகொண்ட விழிப்புணர்வுப் பேரணி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய இந்தப் பேரணியை மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சங்கரநாராயணன் ஆகியோர் தொடங்கிவைத்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது.