விழுப்புரத்தை அடுத்த கீழ்பெரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா அரசு கலை,அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி மாணவர்களின் தேர்வு கட்டணத்தை உயர்த்தி பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இளங்கலை மாணவர்கள் தேர்வு ஒன்றுக்கு ரூ.68 செலுத்தி வந்த நிலையில், தற்போது இந்த கட்டணம் ரூ. 100ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் முதுகலை மாணவர்களின் தேர்வு கட்டணம் ரூ. 250 லிருந்து, ரூ. 500ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், பல்கலைக்கழத்தின் இந்த தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு கல்லூரி நிர்வாகமும்,போலீசாரும் பேச்சுவார்த்தை நடத்தியதில் போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தை முன்நின்று நடத்திய 13 மாணவர்கள் மீது இன்று போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.