விழுப்புரம் மகா சிவராத்திரியை முன்னிட்டு விழுப்புரம் கைலாசநாதர் கோயிலில் வருகிற 21ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆயிரத்து எட்டு சங்குஸ்தாபனம் பூஜை நடைபெறுகிறது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு பூர்ணாஹூதி, மதியம் 3 மணிக்கு பிரதோஷ பூஜை, மாலை 6 மணிக்கு முதல் கால பூஜை, இரவு 9 மணிக்கு 2ஆம் கால பூஜையும் நடைபெற உள்ளது.
இதைத்தொடர்ந்து 22ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜையும், 5 மணிக்கு சுவாமி திருவீதியுலா புறப்பாடும் நடக்கிறது.
இதனால் மகாசிவராத்திரி விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற்காக கைலாசநாதர் கோயிலில் இன்று முதல் கைலாசநாதர் கோயில் பிரதோஷ பேரவை சார்பில், 50 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: மகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!