விழுப்புரம் : விழுப்புரம் அருகே இயங்கி வரும் தனியார் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு அதே பள்ளியில் முதல்வர் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்பட்டு உள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிச்சியடந்த மாணவியில் பெற்றோர், இது குறித்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோது பள்ளியின் முதல்வர், மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். இதனையடுத்து அவர் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வரை போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த பள்ளி முதல்வரை இன்று (ஜன.18) காலை விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி ஹர்மிஸ் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!