ETV Bharat / state

'காவல் துறை மக்கள் விரும்பும் துறையாக செயல்படும்' - Villupuram new sp

விழுப்புரம் மாவட்ட காவல் துறை பொதுமக்கள் விரும்பும் துறையாக செயல்படும் என இன்று(ஜூன் 2) புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதிய காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன்

author img

By

Published : Jul 2, 2020, 3:00 PM IST

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்துவந்த எஸ்.ஜெயக்குமார் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக மாற்றப்பட்டார். அதன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக எஸ். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று(ஜூன் 2) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ். ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி. காவல் துறைக்கும், பொதுமக்களுக்கும் நல்லுறவை ஏற்படுத்துவதே எனது முதல் பணி.

புதிய காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராதாகிருஷ்ணன்

எனது பணியில் பொதுமக்களின் குறைகளைப் போக்கி அவர்களின் நம்பிக்கையைப் பெறுவதில் முழு கவனம் செலுத்தப்படும். பொதுமக்கள் தங்களது பிரச்னைகள் குறித்து எந்த நேரமும் என்னை தொடர்புகொண்டு குறைகளை தெரிவிக்கலாம். சட்டத்தை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் துறை பொதுமக்கள் விரும்பும் துறையாக செயல்படும். ரவுடிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

இதையும் படிங்க: சென்னை புதிய காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் யார்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.