இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு அரசின் ஊரடங்கு உத்தரவை செயல்படுத்திட கரோனா பாதுகாப்புப் பணி சேவைக்காக காவல்துறையுடன் இணைந்து பணிபுரிந்திட விருப்பமுள்ள 60 வயதுக்குட்பட்ட முன்னாள் படைவீரர்கள், முன்னாள் இளநிலை படை அலுவலர்களுக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பு பணிக்கு கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது பாதுகாப்பு பணிக்கு வழங்கப்பட்டது போல, மதிப்பு ஊதியம் வழங்கப்படும். ஏப்ரல் 10ஆம் தேதி முதல் ஏப்ரல் 20ஆம் தேதி வரை பணிகாலம் ஆகும்.
விருப்பமுள்ள முன்னாள் படை வீரர்கள், இளநிலை படை அலுவலர்கள், மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல அலுவலரை 9940974565 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்கள் ஊரில் உள்ள காவல் நிலையத்தின் மூலமாகவும் தங்கள் விருப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க...ஊரடங்கால் பசியில் வாடும் நாடோடி மக்கள்!