நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா பரவலைத் தடுக்க, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இதுவரை 48 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஏற்கெனவே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். 1,333 பேர் அவரவர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 29 நபர்கள் கரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டு முடிவுக்காக காத்துள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பின்பற்றப்படும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அம்மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் விழுப்புரம் புதிய, பழைய பேருந்து நிலையங்களில் இயங்கி வரும் காய்கறிச் சந்தை, மருதூர், கமலா நகர், மந்தகரை ஆகியப் பகுதிகளில் இன்று காலை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றுதல், காய்கறிச் சந்தைகளைத் தூய்மையாகப் பேணுதல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்திச் சென்றனர்.
இதையும் படிங்க: தாய் இறுதி சடங்கு முடித்த கையோடு பணி - தூய்மைப் பணியாளருக்கு எம்.எல்.ஏ பாராட்டு