ETV Bharat / state

கரோனா நிவாரண நிதிக்கு உதவிக்கரம் நீட்டிய சிறுமி - Prime Minster to help you

விழுப்புரம்: பட்டயக் கணக்காளரின் மகள் சேமிப்பு உண்டியல் பணத்தை, பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

villupuram child donate fund to PM & CM corona relief fund

author img

By

Published : Mar 31, 2020, 10:05 AM IST

சீனாவில் உருவான கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை அச்சுறுத்திவருகிறது. இந்த பரவல் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் வரும் 14ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த பட்டயக் கணக்காளர் ரகுநாதன் ஜெயபதி என்பவரது இரண்டரை வயது மகள் ஸ்பூர்த்தி தனது உண்டியல் பணத்தை பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதி திட்டத்துக்கு அனுப்பியுள்ளார். பிரதமர் தேசிய பேரிடர் திட்டத்துக்கு 2,200 ரூபாயையும், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 2,220 ரூபாயையும் ஸ்பூர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது தந்தை இணையம் மூலம் அனுப்பியுள்ளார்.

பிரைம் மினிஸ்டர் அங்கிளுக்கு உதவும் விழுப்புரம் சிறுமி!

இதுகுறித்து பேசிய ஸ்பூர்த்தியின் தந்தை ரகுநாதன்.,"யாரையும் உண்டிலைத் தொட அனுமதிக்கமாட்டார். ஆனால், கரோனா தாக்கம் குறித்த செய்திகளைப் பார்த்துவிட்டு, என்னாச்சுப்பா..? என்று மகள் ஸ்பூர்த்தி கேட்டார் என் விளக்கத்துக்குப் பிறகு, தனது சேமிப்பு உண்டியலை உடைத்து, பிரதமருக்கும், முதலமைச்சருக்கும் அனுப்ப விருப்பம் தெரிவித்தார்" என்றார்.

இதையும் படிங்க...கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - அலுவலர்களுடன் அமைச்சர் ஆலோசனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.